நெல்லையப்பர் கோயில் ஆனி திருவிழா கொடியேற்றம்

2 months ago 13

செய்திப்பிரிவு

Last Updated : 25 Jun, 2023 06:23 AM

Published : 25 Jun 2023 06:23 AM
Last Updated : 25 Jun 2023 06:23 AM

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் நேற்று ஆனிப் பெருந்திருவிழா கொடியேற்றத்துக்கு பிறகு கொடிமரத்துக்கு தீபாராதனை நடை பெற்றது. படம்: மு.லெட்சுமி அருண்
<?php // } ?>

திருநெல்வேலி: திருநெல்வேலி காந்திமதி அம்பாள் சமேத நெல்லையப்பர் கோயில் ஆனிப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.

விழாவின் தொடக்கமாக நேற்று அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூபம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து மகா மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள யாக சாலையில் ஹோமங்களுடன் பூஜைகள் நடைபெற்றன.

பிரதான கொடிமரத்துக்கு அருகில் சுவாமி-அம்பாள் எழுந்தருள கொடிப்பட்டத்துக்கு பூஜைகள் நடைபெற்றன. காலை 7.30 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. தொடா்ந்து கொடி மரத்துக்கு 16 வகை பொருட்களால் அபிஷேகங்கள் நடைபெற்று, சிறப்பு அலங்காரம், தீபாராதனைகள் நடைபெற்றன. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இரவு 7 மணிக்கு சுவாமி, அம்மன் பூங்கோயில் சப்பரத்தில் திருவீதியுலா நடைபெற்றது.

இத்திருவிழா ஜூலை 3-ம் தேதி வரை நடைபெறுகிறது. விழா நாட்களில் காலை, மாலையில் சுவாமி, அம்மன் பல்வேறு வாகனங்களில் திருவீதியுலா நடைபெறும். ஜூலை 2-ல் தேரோட்டம், 10-ம் நாளில் தீர்த்தவாரி நடைபெறுகிறது.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

Read Entire Article