Last Updated:September 20, 2025 12:38 PM IST
தற்போதைய நவீன மற்றும் வேகமான உலகில் நம் ஆரோக்கியத்தை பேணுவது சவாலாக இருக்கிறது. பலர் தங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் இயற்கை சார்ந்த தீர்வுகளை நாடுகிறார்கள்.

தற்போதைய நவீன மற்றும் வேகமான உலகில் நம் ஆரோக்கியத்தைப் பேணுவது சவாலாக இருக்கிறது. பலர் தங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் இயற்கை சார்ந்த தீர்வுகளை நாடுகிறார்கள்.
இவர்களில் நீங்களும் ஒருவர் என்றால் ஒரு சக்திவாய்ந்த தீர்வாக நெல்லிக்காய் உள்ளது. நெல்லியில் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உதவும் அத்தியாவசிய வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. அந்த வகையில் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் 6 முக்கிய ஆரோக்கிய நன்மைகள் மற்றும் நெல்லி ஜூஸை உங்கள் அன்றாட வழக்கத்தில் எவ்வாறு சேர்த்துக்கொள்வது என்பதைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
கூந்தல் மற்றும் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துவது முதல் எடை குறைப்பிற்கு உதவுவது மற்றும் இதய ஆரோக்கியத்தை ஆதரிப்பது என நெல்லிக்காய் ஜூஸ் நமக்கு பல நன்மைகளை வழங்குகிறது. நெல்லி ஜூஸை காலையில் டீடாக்ஸ் பானமாகவோ அல்லது ஹெர்பல் டீ-யில் கலக்கவோ பயன்படுத்தலாம். நெல்லி ஜூஸின் நன்மைகள் குறித்து Rasayanam நிறுவனர் ஆயுஷ் அகர்வால் கூறியுள்ள தகவல்களைப் பார்க்கலாம்.
நெல்லி ஜூஸால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்:
- நெல்லிக்காய் ஜூஸ் வைட்டமின் சி-யின் சிறந்த மூலமாகும், எனவே இது நம்முடைய நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி, தொற்றுகளை எதிர்த்து நம் உடல் போராட உதவுகிறது. தொடர்ந்து இந்த ஜூஸை பருகுவது சளி, இருமல் மற்றும் பருவகால காய்ச்சல் போன்ற பொதுவான நோய் பாதிப்புகளைத் தடுக்க உதவலாம்.
- இந்த ஜூஸ் நம் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தி அசிடிட்டியை குறைப்பதன் மூலம் குடலை ஆரோக்கியமாக வைக்கிறது. மேலும் இது ஊட்டச்சத்துக்களை உறிஞ்சும் திறன் மற்றும் ஒட்டுமொத்த செரிமான செயல்பாடுகளை மேம்படுத்துகிறது.
- நெல்லி ஜூஸில் நிறைந்து இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சருமம் வயதான தோற்றத்தைப் பெறுவதை மெதுவாக்குகிறது, சுருக்கங்களைக் குறைக்கிறது மற்றும் சருமத்திற்கு இயற்கையான பளபளப்பை அளிக்கிறது. தவிர இது கூந்தலை வலுவாக்குகிறது, பொடுகைத் தடுக்கிறது மற்றும் முடி உதிர்தலையும் குறைக்கிறது.
- வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதன் மூலம், விரைவாக கொழுப்பைக் குறைக்க இந்த ஜூஸ் உதவுகிறது. மேலும் இந்த ஜூஸ் வயிறு நிரம்பிய உணர்வையும், தேவையற்ற பசியையும் குறைத்து, உடல் எடை குறைக்கும் முயற்சிக்கு உதவுகிறது.
- குறிப்பாக நீரிழிவு நோயாளிகளுக்கு நெல்லி ஜூஸ் நன்மை பயக்கக்கூடிய பானமாக உள்ளது, ஏனெனில் இது ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது மற்றும் இன்சுலின் சென்சிட்டிவிட்டியை மேம்படுத்துகிறது மற்றும் ரத்த சர்க்கரையில் ஏற்படும் திடீர் அதிகரிப்பைக் குறைக்கிறது.
- நெல்லி ஜூஸ் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்க, ரத்த ஓட்டத்தை மேம்படுத்த, இதய நோய்கள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. இதில் அடங்கி இருக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இதயத்தை ஆரோக்கியமாக வைக்க பங்களிக்கின்றன.
உங்கள் அன்றாட வழக்கத்தில் நெல்லி ஜூஸை சேர்ப்பதற்கான வழிகள்:
- காலை எழுந்ததும் ஒரு ஸ்பூன் நெல்லி ஜூஸை எடுத்து வெதுவெதுப்பான நீர் மற்றும் தேனுடன் கலந்து, வெறும் வயிற்றில் அருந்தி அன்றைய நாளை புத்துணர்ச்சியுடன் தொடங்கலாம்.
- பழங்கள் அல்லது காய்கறிகள் கொண்டு தயாரிக்கப்படும் ஸ்மூத்திக்களின் ஊட்டச்சத்து மதிப்பை அதிகரிக்க அதில் சிறிதளவு நெல்லி ஜூஸை சேர்க்கலாம்.
- நெல்லி ஜூஸை இஞ்சி, துளசி அல்லது லெமன் டீயுடன் கலந்து புத்துணர்ச்சியூட்டும் மற்றும் ஆரோக்கியமான பானத்தைப் பருகுங்கள்.
- பளபளப்பான சருமத்திற்கும் மற்றும் வலுவான, ஆரோக்கியமான கூந்தலைப் பெறவும் நீர்த்த நெல்லி ஜூஸை முகம் அல்லது உச்சந்தலையில் தடவி சிறிது நேரம் ஊறவைத்து பின் கழுவி விடவும்.
- உணவு சாப்பிட்ட பின் சிறிதளவு நெல்லி ஜூஸ் குடிப்பது செரிமானத்தை மேம்படுத்தி, வயிற்று உப்புசம் ஏற்படுவதைத் தடுக்கும்.
மொத்தத்தில் நெல்லி ஜூஸ் நம் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் ஒரு எளிய, இயற்கையான வழியாகும். இதை நம் தினசரி வழக்கங்களில் சேர்ப்பது ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும்.

புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையில் பெருமாள் வழிபாடு இப்படி செய்யுங்க.!
புரட்டாசி சனிக்கிழமையில் பெருமாளை வழிபடுவது சனி பகவானால் ஏற்படும் கெடுபலன்களை குறைக்கும்.
புரட்டாசி சனிக்கிழமையில் திருப்பதி வெங்கடாசலபதியை வணங்குவது மிகுந்த புண்ணியம் தரும்.
வெங்கடேசப் பெருமாளின் படத்திற்கு மாலை சூட்டி, நெய் தீபம் ஏற்றி வழிபடுவது செல்வம் பெருகும்.