Last Updated:September 20, 2025 6:40 PM IST
பிரபல மலையாள நடிகர் மோகன்லாலுக்கு 'தாதாசாகேப் பால்கே' விருது அறிவித்திருக்கிறது மத்திய அரசு.

மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் மோகன்லால். தொடர்ச்சியாக மலையாளத்தில் ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். அவரின் நடிப்பில் அண்மையில் வெளியான ஹிருதய பூர்வம் நல்ல வரவேற்பைப் பெற்றது. ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ஷாருக்கான் என சூப்பர்ஸ்டார்கள் கோலோச்சும் இந்திய திரைத்துறையில் ஒரே வருடத்தில் 34 படங்களை ரிலீஸ் செய்து அசத்தியவர் மோகன்லால்.
கடந்த 1986-ம் ஆண்டு மோகன்லால் நடிப்பில் 34 படங்கள் வெளியாகின. அதில் 25 படங்கள் பாக்ஸ் ஆஃபீஸில் வசூல் குவித்தன. ஒரு நடிகரின் 34 படங்கள் ஒரே ஆண்டில் வெளியாவது இதுவே முதன்முறை. 1980-ம் ஆண்டு ஃபாசில் இயக்கத்தில் வெளியான 'மஞ்சில் விரிஞ்ச பூக்கள்' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் மோகன்லால். இதுவரை 400க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.
64 வயதாகும் மோகன்லால் இதுவரை 5 தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார். 9 மாநில அரசின் விருதுகளை வென்றுள்ளார். இது தவிர, பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன் விருதுகள் வழங்கி மத்திய அரசு இவரை கவுரவித்துள்ளது. அதேபோல மலையாளத்தின் முதல் ரூ.200 கோடியை வசூலை ஈட்டியவர் மோகன்லால். 2019-ம் ஆண்டு வெளியான 'லூசிஃபர்' படம் மலையாளத்தின் முதல் ரூ.200 கோடி வசூல் சாதனையைப் படைத்தது.
எண்ணற்ற படங்களில் நடித்துள்ள மோகன்லால் மலையாள படங்களைத் தாண்டி வேறு மொழி படங்களிலும் நடித்து வருகிறார். மலையாள சினிமாவே பிரதானம் என்றாலும், மற்ற மொழிகளிலும் மோகன்லால் நடித்து வருகிறார். அந்த வகையில் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் கூட ஜெயிலர் ஒன்றாம் பாகத்தில் நடித்தவர், தற்போது இரண்டாம் பாகத்திலும் ரஜினிகாந்த் உடன் மோகன்லால் நடித்து வருகிறார். இதன் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
நடிகர் மோகன்லால் இத்தனை ஆண்டுகாலம் நிலைத்த நட்சத்திர அந்தஸ்து கொண்ட நடிகராக இருந்து வரும் நிலையில் அவருக்கு மத்திய அரசு தாதாசாகேப் பால்கே விருது அறிவித்து கௌரவித்திருக்கிறது. செப்.23ம் தேதி நடைபெறும் 71வது தேசிய விருதுகள் விழாவில், தாதாசாகேப் பால்கே விருது மோகன்லாலுக்கு வழங்கப்படுகிறது. சில ஆண்டுகள் முன் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டது.

"முதலமைச்சர் தனது சொந்த மாவட்டத்தையே கருவாடாக காயவிட்டிருக்கிறார்"!
முதலமைச்சர் சொந்த மாவட்டத்தை கருவாடாக மாற்றியதாக திருவாரூரில் விஜய் குற்றச்சாட்டு முன்வைத்தார்.
விவசாயிகளின் பணத்தில் லஞ்சம் வசூலிப்பதாகவும், அடிப்படை வசதிகள் இல்லையெனவும் விஜய் குற்றம்சாட்டினார்.
திருவாரூர் மாவட்டத்தில் சாலை வசதி மற்றும் பஸ் ஸ்டாண்ட் இணைப்பு இல்லை என கூறினார்.