Last Updated : 24 Aug, 2023 07:00 PM
Published : 24 Aug 2023 07:00 PM
Last Updated : 24 Aug 2023 07:00 PM

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் வியாழக்கிழமை வீழ்ச்சியுடன் நிறைவடைந்தன. சென்செக்ஸ்180 புள்ளிகள் (0.28 சதவீதம்) சரிவடைந்து 65,220 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 57 புள்ளிகள் (0.29 சதவீதம்) சரிந்து 19,386 ஆக இருந்தது.
பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகத்தை ஏற்றத்துடன் தொடங்கின. காலை 10:14 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 362.36 புள்ளிகள் உயர்வடைந்து 65,795.66 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி113.15 புள்ளிகள் உயர்ந்து 19,557.15 ஆக இருந்தது.
உலகளாவிய சந்தைகளின் சாதகமான நிலை, சந்திரயான் வெற்றி என்ற சாதகமான சூழல்களில் இன்றைய வர்த்தகத்தை ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச்சந்தைகள் ஆரம்ப லாபத்தை தக்கவைக்க தவறி இன்றைய வர்த்தகத்தை வீழ்ச்சியில் நிறைவு செய்தன. சென்செக்ஸ் இன்றைய நாளின் அதிகபட்ச உயர்வில் இருந்து சுமார் 700 புள்ளிகள் வரை சரிந்தது.
இன்றைய வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 180.96 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 65,252.34 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 57.30 புள்ளிகள் வீழ்ந்து 19,386.70 ஆக இருந்தது.
தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை இன்டஸ்இன்ட் பேங்க், ஏசியன் பெயின்ட்ஸ், இன்போசிஸ், அல்ட்ராடெக் சிமெண்ட்ஸ், நெஸ்ட்லே இந்தியா, ஆக்ஸிஸ் பேங்க், ஐசிஐசிஐ பேங்க், பாரதி ஏர்டெல், ஹிந்துஸ்தான் யுனிலீவர், பஜாஜ் ஃபைனான்ஸ், ஐடிசி, எம் அண்ட் எம், கோடாக் மகேந்திரா பேங்க் பங்குகள் உயர்வடைந்திருந்தன.
ஜியோ ஃபைனான்ஸ், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், பவர் கிரிடு கார்ப்பரேஷன், ஜெஎஸ்டபில்யூ ஸ்டீல், எல் அண்ட் டி, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், விப்ரோ, டாடா ஸ்டீல், ஹெச்டிஎஃப்சி பேங்க், டாடா மோட்டார்ஸ், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், என்டிபிசி, டிசிஎஸ், மாருதி சுசூகி, டைட்டன் கம்பெனி, டெக் மகேந்திரா, பஜாஜ் ஃபின்சர்வ், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.
தவறவிடாதீர்!
- டாப் 4 நாடுகளை விட இந்திய பொருளாதார வளர்ச்சி விகிதம் அதிகம்: மத்திய நிதித் துறை செயலாளர்
- ‘ஆசிய வளரும் நாடுகளில் 7 கோடி பேரை வறுமைக்குத் தள்ளிய கரோனா பெருந்தொற்று’
- இளைஞர்கள் மத்தியில் முத்திரை பதித்த ‘ஸ்டார்ட் அப்’ திருவிழா @ கோவை
- இ-வர்த்தகம் | பெரிய, சிறிய வர்த்தகர்கள் இடையே சமமான போட்டியை உறுதி செய்ய வேண்டும்: பிரதமர் மோடி