சென்செக்ஸ் 137 புள்ளிகள் உயர்வு

1 month ago 14

செய்திப்பிரிவு

Last Updated : 16 Aug, 2023 05:55 PM

Published : 16 Aug 2023 05:55 PM
Last Updated : 16 Aug 2023 05:55 PM

<?php // } ?>

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் புதன்கிழமை ஏற்றத்துடன் நிறைவடைந்தன. சென்செக்ஸ் 137 புள்ளிகள் (0.21 சதவீதம்) உயர்வடைந்து 65,539 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 30 புள்ளிகள் (0.16 சதவீதம்) உயர்ந்து 19,465 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகள் இன்று வீழ்ச்சியுடன் தொடங்கின. காலை 10:16 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 127.15 புள்ளிகள் சரிவடைந்து 65274.77 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 56.60 புள்ளிகள் சரிந்து 19,377.95 ஆக இருந்தது.

உலகளாவிய சந்தைகளின் பாதகமான சூழல், இந்தியாவின் சில்லறை பணவீக்கம் உயர்வு, வங்கி, நிதி பங்குகளின் வீழ்ச்சி காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகத்தை வீழ்ச்சியுடன் தொடங்கின. வர்த்தக நேரத்தின் போது பெரும் ஏற்ற இறக்கத்துடன் சென்றது. இருந்தபோதிலும் தகவல் தொழில்நுட்பம், பார்மா, வாகனப் பங்குகளின் ஏற்றத்தால் இன்றைய வர்த்தகத்தை லாபத்துடன் நிறைவு செய்தன.

இன்றைய வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 137.50 புள்ளிகள் உயர்வடைந்து 65,539.42 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 30.50 புள்ளிகள் உயர்ந்து 19,465 ஆக இருந்தது.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை அல்ட்ரா டெக் சிமெண்ட், என்டிபிசி, டாடா மோட்டார்ஸ், இன்போசிஸ், எம் அண்ட் எம், பவர் கிரிடு கார்ப்பரேஷன், மாருதி சுசூகி, எல் அண்ட் டி, விப்ரோ, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர், டெக் மகேந்திரா, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், ஐடிசி, டிசிஎஸ், டைட்டன் கம்பெனி பங்குகள் உயர்வடைந்திருந்தன.

டாடா ஸ்டீல், பாரதி ஏர்டெல், பஜாஜ் ஃபின்சர்வ், ஆக்ஸிஸ் பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ், இன்டஸ்இன்ட் பேங்க், ஜெஎஸ்டபில்யூ ஸ்டீல், கோடாக் மகேந்திரா பேங்க், ஐசிஐசிஐ பேங்க், ஹெச்டிஎஃப்சி பேங்க், ஏசியன் பெயின்ட்ஸ், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், நெஸ்ட்லே இந்தியா பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.

தவறவிடாதீர்!

Read Entire Article