சுவையான இளநீர் பாயாசம் செய்ய வேண்டுமா..? இந்த ஸ்டெப் மறந்துடாதீங்க!

2 days ago 5

Last Updated:September 20, 2025 12:04 PM IST

உடல் வெப்பத்தை குறித்து மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, நீர்க்கடுப்பு போன்ற பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வாக அமையும், இளநீர் பாயாசத்தை குறைந்த நேரத்தில் எளிமையான முறையில் தயாரிப்பது எப்படி எனத் தெரிந்து கொள்ளலாம்.

News18
News18

விழா காலங்களில் அல்லது வீட்டில் விருந்து நிகழ்ச்சிகளில் ஒரு தனித்துவமான இனிப்பு தேவை என்றால், அதற்கு இளநீர் பாயசம் சிறந்த தீர்வாக அமையும். வழக்கமான பாயாசங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட இது அனைவரையும் கவர்ந்திழுக்கும். இளநீரின் இயற்கையான இனிப்பும் வாசமும் பாலுடன் சேரும்போது கிடைக்கும் மென்மையான சுவையும் இந்த இனிப்பை மேலும் சிறப்பானதாக மாற்றுகிறது.  உடல் வெப்பத்தை குறித்து மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, நீர்க்கடுப்பு போன்ற பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வாக அமையும், இளநீர் பாயாசத்தை குறைந்த நேரத்தில் எளிமையான முறையில் தயாரிப்பது எப்படி எனத் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருள்கள்:

பால் - அரை லிட்டர்

இளநீர் வழுக்கை -  ஒரு கப்

சர்க்கரை - 1/4 முதல் அரை கப்

கண்டன்ஸ்டு மில்க் அல்லது மில்க் மேடு - 1/4 கப்

ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்

முந்திரிப்பருப்பு - 10 முதல் 15

நெய் - ஒரு டீஸ்பூன்

செய்முறை:

அடிகனமான ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி மிதமான தீயில் நன்கு கொதிக்க வைக்க வேண்டும். ஏலக்காய்த்தூள் மற்றும் தேவையான சர்க்கரை அல்லது கண்டன்ஸ்டு மில்க் சேர்த்து நன்கு கலந்து அடுப்பை அணைத்து விட வேண்டும்.

இந்த பாலை முழுமையாக ஆற வைக்க வேண்டும். சூடான பாலில் இளநீர் வழுக்கை சேர்த்தால் பால் திரிந்து விடும். பால் நன்றாக ஆறிய பிறகு குளிர்சாதனப் பெட்டியில் வைத்துக் கொள்வது மிக முக்கியம்.

எடுத்து வைத்திருக்கும் இளநீர் வழுக்கைகளில் பாதியை எடுத்து மிக்ஸியில் அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். இதனுடன் சிறிதளவு இளநீர் தண்ணீர் சேர்த்து நல்ல பேஸ்ட் ஆகுமாறு அரைத்து தனியே எடுத்து வைக்க வேண்டும். மீதமுள்ள இளநீர் வழுக்கையை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

ஒரு சிறிய கடாயில் நெய் ஊற்றி முந்திரி பருப்பை பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். முழுவதுமாக ஆற வைத்து குளிர வைத்த பாலுடன் அரைத்து வைத்திருக்கும் நீர் வழுக்கையை நன்கு கலக்க வேண்டும். மீதமுள்ள நறுக்கி இளைஞர் வாழ்க்கை துண்டுகளையும் வறுத்த முந்திரிப்பருப்பையும் அவற்றுடன் சேர்க்க வேண்டும்.

இனிப்பு குறைவாகவும் கட்டியாகவும் இருந்தால் மேலும் தேவையான அளவு கண்டன்ஸ்டு மில்க் மற்றும் இளநீர் தண்ணீரை சேர்த்து சரி செய்யலாம். அனைவரும் இதனை விரும்பி சாப்பிடுவார்கள்.

(குறிப்பு: இளநீர் வழுக்கையை சேர்த்த பிறகு பாயாசத்தை மீண்டும் சூடுபடுத்தவோ கொதிக்க வைக்கவோ கூடாது. இது பாயசம் திரிந்துபோகாமல் இருக்க உதவும். இந்த பாயாசத்தை தயாரித்த அன்று உபயோகிப்பது சிறந்தது.)

நியூஸ்18 தமிழின் லைஃப்ஸ்டைல் ​​கேட்டகிரியானது, உடல்நலம், உணவு, டிராவல், ஃபேஷன், சமையல் குறிப்புகள் மற்றும் பலவற்றைப் பற்றிய சமீபத்திய தகவல்களை உங்களுக்கு வழங்குகிறது.

First Published :

September 20, 2025 12:04 PM IST

Read Entire Article