குழந்தைகளிடையே அதிகரித்து வரும் உடல் பருமன்.. பெற்றோர்களே கவனம்!

2 days ago 4

உட்கார்ந்த வாழ்க்கை முறை, அதிக கலோரி உணவுகள் மற்றும் அதிக திரை நேரம் காரணமாக இது பரவலாக அதிகரித்து வரும் உடல்நலச் சிக்கலாக உருவெடுத்து வருகிறது. இதுகுறித்து மருத்துவர்கள் எச்சரிப்பதாவது, குழந்தைகளில் உடல் பருமன் என்பது நீண்ட காலத்தில் நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இதய நோய் மற்றும் மனநலச் சவால்களை ஏற்படுத்தும் அதிக அபாயத்தைக் கொண்டதாகத் தெரிவிக்கிறார்கள். ஆனால் நல்ல செய்தி என்னவென்றால், சரியான வாழ்க்கை முறை மற்றும் பெற்றோரின் கவனமான வழிகாட்டுதலால், குழந்தைகளைச் சிறு வயதிலேயே ஆரோக்கியமாக வளர்க்க முடியும்.

1. ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள்

குழந்தைகள் பெரும்பாலும், சொல்லப்படும் அறிவுறுத்தலை பின்பற்றுவதை விட, பெற்றோரின் நடத்தையையே அதிகம் பின்பற்றுகிறார்கள். ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி மற்றும் போதுமான தூக்கத்தைப் பின்பற்றும் பெற்றோர்கள், அதையே குழந்தைகளுக்கும் பழக்கமாக்க முடியும்.

டாக்டர் அஸ்மிதா மகாஜன் (தலைமை நியோனாட்டாலஜிஸ்ட் & குழந்தை மருத்துவர், எஸ்.எல். ரஹேஜா மருத்துவமனை, மஹிம் - ஃபோர்டிஸ் அசோசியேட்) இதுபற்றி விளக்கும் போது, "குழந்தையை உடல் பருமனிலிருந்து பாதுகாப்பதற்கான முதல் படி, பெற்றோர்கள் முன்மாதிரியாக இருப்பது தான். நல்ல உணவுப் பழக்கங்கள், உடற்பயிற்சி, சரியான தூக்க அட்டவணை போன்றவை அதன் மூன்று முக்கிய தூண்களாகும்" என்றார்.

2. உடல் செயல்பாடு மற்றும் வெளிப்புற விளையாட்டை ஊக்குவித்தல்

ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்க, உடற்பயிற்சி அவசியம். ஆனால், குழந்தைகளுக்கு அது ஜிம் பயிற்சி போன்று இருக்கத் தேவையில்லை. சைக்கிள் ஓட்டுதல், நீச்சல், நடனம், கிரிக்கெட் அல்லது நண்பர்களுடன் வெளியில் விளையாடுதல் என எதுவாக இருந்தாலும் தினமும் குறைந்தது ஒரு மணி நேரம் உடல் செயல்பாடு அவசியம்.

"உடற்பயிற்சி தினசரி வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும், அதிக திரை நேரத்தைக் குறைத்து, வெளிப்புறத்தில் விளையாட்டை அதிகரிப்பது மிகவும் முக்கியம்" என்று டாக்டர் அஸ்மிதா மகாஜன் கூறுகிறார்.

3. திரை நேரத்தை கட்டுப்படுத்துதல்

கேட்ஜெட்களில் குழந்தைகள் அடிமையாவது அவர்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும் மற்றொரு முக்கிய காரணமாகும். நீண்ட நேரம் டிவி, மொபைல் அல்லது கேமிங் கன்சோல்களில் மூழ்கிக் கிடப்பது, உடல் இயக்கத்தைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல், அதிக சாப்பிடுதலையும், தூக்கக் குறைபாடையும் உருவாக்குகிறது.

"இன்றைய குழந்தைகள் கேட்ஜெட்களுக்கு அதிகம் அடிமையாகிவிட்டனர். உடல் செயல்பாடு இல்லாததால், இது உடல் பருமனுக்கான முக்கிய காரணமாக இருக்கிறது" என்று டாக்டர் அஸ்மிதா மகாஜன் எச்சரிக்கிறார்.

4. ஆரோக்கியமான உணவு

பதப்படுத்தப்பட்ட, சர்க்கரை மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளைக் குறைத்து, புதிய பழங்கள், காய்கறிகள், தானியங்கள் மற்றும் வீட்டில் சமைத்த உணவுகளை அதிகரிக்க மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

டாக்டர் ருச்சி கோலாஷ் (குழந்தை மருத்துவர், சிஎம்ஆர்ஐ, கொல்கத்தா) கூறுகையில், "குழந்தை பருவ உடல் பருமன், பள்ளி வயதுக்கு முன்பே தடுக்கப்பட வேண்டும். பிரத்தியேக தாய்ப்பால், வீட்டில் சமைத்த உணவு, உள்ளூர் பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்றவை குழந்தையின் வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியத்திற்கு அடித்தளமாக இருக்கும்." என்று வலியுறுத்துகிறார்.

5. தூக்கம் மற்றும் குடும்ப ஆதரவு

போதுமான தூக்கம், பசியைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன்களை சமநிலைப்படுத்துகிறது. தாமதமான படுக்கை நேரங்கள் மற்றும் குறைந்த தூக்கம் உடல் எடை அதிகரிக்கக் காரணமாகும்.

"தூக்கம் பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை. ஆனால் அது ஹார்மோன் சமநிலையைப் பாதிக்கிறது, இதன் விளைவாக குழந்தைகள் அதிகமாக சாப்பிடத் தொடங்குவார்கள்" என்று டாக்டர் உக்ரா கூறுகிறார்.

டாக்டர் அஸ்மிதா மகாஜனும் இதையே வலியுறுத்துகிறார், "குழந்தைகள் சரியான நேரத்தில் படுக்கைக்குச் சென்று போதுமான ஓய்வு பெற வேண்டும். இல்லையெனில், உடல் பருமன் அதிகரிக்கவே வாய்ப்புள்ளது." என்கிறார்.

"உடல் பருமன் தடுக்கக்கூடியது தான், ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள் மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கைமுறை மூலம், ஆரோக்கியமான மற்றும் ஆற்றல்மிக்க தலைமுறையை உருவாக்கலாம்" என்று டாக்டர் கோலாஷ் கூறுகிறார்.

நியூஸ்18 தமிழின் லைஃப்ஸ்டைல் ​​கேட்டகிரியானது, உடல்நலம், உணவு, டிராவல், ஃபேஷன், சமையல் குறிப்புகள் மற்றும் பலவற்றைப் பற்றிய சமீபத்திய தகவல்களை உங்களுக்கு வழங்குகிறது.

First Published :

September 20, 2025 5:52 PM IST

Read Entire Article