மாதம்பட்டி ரங்கராஜின் 2வது மனைவி ஜாய் கிரிசில்டா, தனது ஆதரவாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க பாகம் 2 என குறிப்பிட்டு தற்போது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
மாதம்பட்டி ரங்கராஜ்
பிரதமர் முதல் தமிழ் சினிமா பிரபலங்கள் வரை அறியப்பட்டவர் தான் மாதம்பட்டி ரங்கராஜ். தமிழ்நாட்டின் பிரபல சமையல் கலைஞராக வலம் வரும் இவரின் சமையலுக்கு என ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கின்றது.
ஆனால் இவரின் எல்லா புகழையும் சீர்குலைக்கும் வகையில், மாதம்பட்டி ரங்கராஜின் இரண்டாவது மனைவி ஜாய் கிரிஸில்டா தற்போது மீடியாவிடம் எல்லா உண்மைகளையும் வெளிப்படையாக பேசியுள்ளார்.
அதனால் நெட்டிசன்கள் ரங்கராஜை இணையத்தில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். முதல் மனைவி இருக்கும் போதே மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாம் திருமணம் செய்தது இவர் முதல் மனைவி உட்பட குடும்பத்தினர் அனைவருக்கும் தெரியும் என குறிப்பிடும் ஜாய் தன் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு நியாயம் வேண்டும் என போராடி வருகின்றார்.
ஆனால் மாதம்பட்டி ரங்கராஜ் அண்மையில், ஜாய் கிரிசில்டா மீது தனது நிறுவனத்துக்கு எதிராக அவதூறு பரப்புவதாக நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்திருந்தார்.
https://www.instagram.com/reel/DOz6ZRjknJB/?utm_source=ig_embed&ig_rid=416bd0bf-795c-4bf2-a4bd-e3aa085ad4d2
இந்நிலையில், பல ஜென்மம் தாண்டி வந்த உறவே என குறிப்பிட்டு ரங்கராஜ், ஜாய் கிரிசில்லாவிடம் முட்டிபோட்டு தனது காதலை சொன்ன காட்டியடங்கிய காணொளியின் பாகம் 2 யை ஜாய் தற்போது வெளியிட்டுள்ளார். குறித்த காணொளி இணையத்தில் வைராலாகி வருகின்றது.