Last Updated:September 20, 2025 12:32 PM IST
கடந்த வாரம் மிடியா என்ற ஏசி உற்பத்தி நிறுவனம், பூஞ்சை வளர்ச்சியை ஊக்குவிக்கும் வடிவமைப்பு குறைபாடு காரணமாக சுமார் 1.7 மில்லியன் ஏசிகளை தானாக முன்வந்து திரும்பப் பெற்றது பரபரப்பு செய்தியானது. எந்த ஏர் கண்டிஷனரும் எவ்வளவு சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருந்தாலும் பூஞ்சை பிரச்சனை ஏற்படலாம். அதிர்ஷ்டவசமாக, இதன் ஆபத்தைக் குறைப்பதற்கான வழிகள் நம்மிடம் உள்ளன.
கடுமையான கோடை காலங்களில் வெப்பத்திலிருந்து நம்மை காப்பாற்றுவது ஏசி மட்டுமே. ஆனால் அவை பூஞ்சை தொடர்பான உடல்நல அபாயங்களை ஏற்படுத்தக்கூடும் எனக் கூறப்படுகிறது. கடந்த வாரம் மிடியா என்ற ஏசி உற்பத்தி நிறுவனம், பூஞ்சை வளர்ச்சியை ஊக்குவிக்கும் வடிவமைப்பு குறைபாடு காரணமாக சுமார் 1.7 மில்லியன் ஏசிகளை தானாக முன்வந்து திரும்பப் பெற்றது பரபரப்பு செய்தியானது. எந்த ஏர் கண்டிஷனரும் எவ்வளவு சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருந்தாலும் பூஞ்சை பிரச்சனை ஏற்படலாம். அதிர்ஷ்டவசமாக, இதன் ஆபத்தைக் குறைப்பதற்கான வழிகள் நம்மிடம் உள்ளன.
என்ன மாதிரியான உடல்நல அபாயங்கள் ஏற்படும்?
அலுவலக ஏர் கண்டிஷனிங் அமைப்புகளுக்குள் உள்ள குளிரூட்டும் சுருள்கள் மற்றும் வடிகால் பாத்திரங்களில் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளைக் கொல்ல புற ஊதா ஒளியால் கதிர்வீச்சு செய்யப்பட்டபோது, அதில் ஈடுபட்ட தொழிலாளர்கள் குறைவான சுவாசம் மற்றும் பிற அறிகுறிகள் ஏற்பட்டதாக புகாரளித்தனர்.
ஈரப்பதம் மற்றும் பூஞ்சைக்கு ஆளாவது ஆஸ்துமா, இருமல், மூச்சுத்திணறல் மற்றும் மேல் சுவாசக் குழாயின் அறிகுறிகளின் அதிகரிப்புகளுடன் தொடர்புடையது என்று ஆய்வொன்று கூறுகிறது, ஆனால் இதற்கு பூஞ்சை தான் முழுமுதற்காரணம் என்பதை இந்த ஆய்வு நிரூபிக்கவில்லை. 2015 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட மற்றொரு ஆய்வு, குழந்தைகளிடத்தில் ஆஸ்துமா அதிகரிப்பதற்கு ஈரப்பதம் மற்றும் பூஞ்சை ஒரு காரணம் என கண்டறிந்தது.
பெரும்பாலும் கட்டிடங்களில் மக்கள் இந்த பூஞ்சையைப் பார்க்கவோ அல்லது முகர்ந்து பார்க்கவோ வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும் ஆகவே இந்த வகையான அறிகுறிகள் அதிகமாகக் காணப்படுவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். "ஈரப்பதம் தொடர்பான சில நுண்ணுயிரியல் வெளிப்பாடுகள் உடல்நலப் பிரச்சனைகளுக்குக் காரணமாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. ஆனால் இதுகுறித்து இன்னும் உறுதியாகத் தெரியவில்லை" என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
நாம் என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கலாம்?
ஏசி ஃபில்டர்களை தவறாமல் சுத்தம் செய்வது போன்ற அடிப்படையான ஏர் கண்டிஷனர் பராமரிப்பு பூஞ்சை வளர்ச்சியைத் தடுக்க உதவும். மாதத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை ஏசியை சுத்தம் செய்வது நல்லது.
உங்களிடம் ஜன்னலில் பொறுத்தும் ஏசி இருந்தாலும் சரி அல்லது செண்ட்ரல் ஏசி இருந்தாலும் சரி, ஈரப்பதமூட்டியைப் பயன்படுத்தி உங்கள் வீட்டில் நிலவும் ஈரப்பதத்தைக் கட்டுப்படுத்துவது உதவியாக இருக்கும். மேலும் உங்கள் வீட்டை சுத்தமாக வைத்திருப்பது நல்லது. ஏனெனில் அது ஏசிக்குள் நுழையக்கூடிய தூசியின் அளவைக் கட்டுப்படுத்தும். ஆனால் இந்த முன்னெச்சரிக்கைகள் சர்வலோக நிவாரணி அல்ல. உங்கள் ஏர் கண்டிஷனரை அவ்வப்போது பரிசோதிக்க வேண்டும். நீண்ட காலத்திற்கு, குறிப்பாக குளிர்காலத்தில் பயன்படுத்தப்படாமல் இருந்தால் இப்போதே சரி செய்து கொள்ளுங்கள்.
ஏசியின் காற்றோட்டக் குழாய்களைச் சுற்றி பூஞ்சைகள் தோன்றக்கூடும். இதை கண்களால் பார்க்க டார்ச்லைட் உதவும். உங்களால் முடிந்தால், ஏசி கையேட்டில் உள்ள வழிமுறைகளின்படி ஜன்னலில் பொறுத்தப்பட்டுள்ள ஏசியை பிரித்தெடுக்கலாம். இன்னும் நெருக்கமாக ஆய்வு செய்ய வேண்டுமென்றால், ஏசிக்குள் இருக்கும் சுருள்கள் மற்றும் வடிகால் பாத்திரத்தை சுத்தம் செய்யலாம்.
நியூஸ்18 தமிழின் லைஃப்ஸ்டைல் கேட்டகிரியானது, உடல்நலம், உணவு, டிராவல், ஃபேஷன், சமையல் குறிப்புகள் மற்றும் பலவற்றைப் பற்றிய சமீபத்திய தகவல்களை உங்களுக்கு வழங்குகிறது.
First Published :
September 20, 2025 12:32 PM IST