Last Updated:September 19, 2025 7:39 PM IST
இந்த பாத்திரங்களில் சமைக்கும்போதோ அல்லத உணவு சேமிப்பிற்காக பயன்படுத்தப்படும்போதோ ஈயம் கசிந்து உணவில் கலக்கிறது. குறைந்த அளவிலான ஈயம் கூட கடுமையான உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பதால், குறிப்பாக குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது.

அலுமினியம், பித்தளை மற்றும் ஹிண்டாலியம்/ஹிண்டோலியம் அல்லது இண்டாலியம்/இண்டோலியம் எனப்படும் சில அலுமினிய உலோகக் கலவைகளால் ஆன பாத்திரங்கள், சமைக்கும் போது உணவை மாசுபடுத்தும், இதனால் இந்தப் பாத்திரங்களில் சமைக்கப்படும் உணவு பாதுகாப்பற்றதாகிவிடும் என்று FDA எச்சரித்துள்ளது.
இந்தியாவில் தயாரிக்கப்படும் சில குறிப்பிட்ட பிராண்ட்களின் சமையல் பாத்திரங்கள் குறித்து அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) எச்சரிக்கை விடுத்துள்ளது. டைகர் ஒயிட், சில்வர் ஹார்ஸ் மற்றும் JK வல்லப்தாஸ் போன்ற பிராண்டுகளின் கீழ் விற்கப்படும் மூன்று சமையல் பாத்திரங்கள், நுகர்வோர் உடனடியாகப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டிய பொருட்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்தப் பாத்திரத்திலிருந்து வரும் ஈயம், ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் அளவில் உணவில் கலக்கப்படுவதாக சில சோதனைகள் வெளிப்படுத்தியதை அடுத்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை குறிப்பாக அலுமினியம், பித்தளை அல்லது அலுமினிய உலோகக் கலவைகளால் (ஹிண்டாலியம், இண்டாலியம் போன்றவை) செய்யப்பட்ட சமையல் பாத்திரங்களைக் குறிக்கிறது. இந்த பாத்திரங்களில் சமைக்கும்போதோ அல்லத உணவு சேமிப்பிற்காக பயன்படுத்தப்படும்போதோ ஈயம் கசிந்து உணவில் கலக்கிறது. குறைந்த அளவிலான ஈயம் கூட கடுமையான உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பதால், குறிப்பாக குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது.
பொதுவாக ஈயமானது மனிதர்களுக்கு நச்சுத்தன்மை வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இதற்குப் பாதுகாப்பான வரம்பு என்பது எதுவும் கிடையாது. இது குழந்தைகளுக்குள் சென்றால், அது அவர்களின் வளர்ச்சியைத் தடுக்கலாம். கடந்த வாரம், இறக்குமதி செய்யப்பட்ட சில சமையல் பாத்திரங்கள் உணவில் ஈயத்தை வெளியிடக்கூடும், இதனால் அது பாதுகாப்பற்றதாக மாறும் என்று சோதனையில் தெரியவந்ததை அடுத்து, FDA எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக அலுமினிய உலோகக் கலவைகளால் (ஹிண்டாலியம், இண்டாலியம் போன்றவை) செய்யப்பட்ட சமையல் பாத்திரங்களில் இந்தப் பிரச்சனை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதுபோன்ற பாத்திரங்களைப் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்திவிட்டு அவற்றைத் தூக்கி எறிய வேண்டும் என்றும், அவற்றை மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டாம் என்றும் FDA எச்சரிக்கை விடுத்துள்ளது. உங்கள் உடலில் ஈயம் நுழைந்துவிட்டதாகவோ அல்லது உங்கள் இரத்தத்தில் அதன் அளவு அதிகரித்திருப்பதாகவோ நீங்கள் சந்தேகித்தால், உடனடியாக ஒரு சுகாதார நிபுணரைத் தொடர்பு கொள்ளவும்.
ஆரம்ப அறிகுறிகள்:
சோர்வு அல்லது பலவீனம் .
தசைகள் அல்லது மூட்டுகளில் வலி.
தலைவலி.
வயிற்று வலி, சில நேரங்களில் குமட்டல் அல்லது வாந்தி.
பசியின்மை, எடை இழப்பு.
குழந்தைகளின் நடத்தையில் ஏற்படும் மாற்றங்கள்: கவனம் செலுத்துவதில் சிரமம், எரிச்சல்.
மிகவும் கடுமையான அல்லது நீண்டகால வெளிப்பாட்டில், அறிகுறிகள் அதிகரிக்கக்கூடும்:
குழந்தைகளுக்கு நரம்பியல் பாதிப்பு, கேட்கும் திறன் அல்லது பேசுவதில் பிரச்சனைகள் ஆகியவை ஏற்படும் மற்றும் பெரியவர்களுக்கு உயர் இரத்த அழுத்தம் அல்லது சிறுநீரக பிரச்சனைகள். இந்த பாத்திரங்களை பயன்படுத்துவதால், அது கடுமையான உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும். குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சியில் குறைபாடு, IQ குறைதல் மற்றும் நடத்தையில் சிக்கல்கள் ஆகியவை ஏற்படலாம். பெரியவர்களுக்கு, சிறுநீரக பாதிப்பு, இதய பிரச்சனைகள், உயர் இரத்த அழுத்தம் மற்றும் நினைவாற்றல் பிரச்சனை ஆகியவை ஏற்படும்.
பாதுகாப்பாக இருக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
உங்கள் சமையல் பாத்திரங்களைச் சரிபார்க்கவும். FDA எச்சரிக்கையில் உள்ள பிராண்டுகளுடன் பொருந்தக்கூடிய சமையல் பாத்திரங்கள் உங்களிடம் இருந்தால், அவற்றைப் பயன்படுத்துவதை நிறுத்துங்கள். அதற்கு பதிலாக பாதுகாப்பான சமையல் பாத்திரங்களைப் பயன்படுத்துங்கள். அதாவது ஸ்டெயின்லெஸ் ஸ்டீல், பீங்கான், அல்லது நான் - டாக்ஸிக் கோட்டட் பேன்கள் போன்ற பொருட்கள் பாதுகாப்பானவை.

வைரலாகும் ஜெமினி ஏஐ டிரெண்ட்; கிண்டல் செய்த ரத்தன் டாடாவின் மேலாளர்...
கூகுளின் ஜெமினி ஏஐ டிரெண்ட் வைரலாகி, மில்லியன் கணக்கானவர்களை ஈர்த்து வருகிறது
ரத்தன் டாடாவின் உதவியாளர், ஜெமினி ஏஐ டிரெண்ட் குறித்து விமர்சனத்தை முன்வைத்தார்
ஜெமினி ஏஐ 1990-களின் பாணியில் படங்களை உருவாக்க, யூசர்களால் பயன்படுத்தப்படுகிறது