ஆமை வந்தால் ஆபத்தா? வீட்டில் ஆமை சிலை வைத்தால் அதிர்ஷ்டத்தை தருமா? வாஸ்து சாஸ்திரம் சொல்வதென்ன?

4 weeks ago 9

Updated: Thursday, August 24, 2023, 13:04 [IST]

Google Oneindia Tamil News

சென்னை: ஆமை ஒரு வீட்டிற்குள் புகுந்துவிட்டால் அந்த வீடு உருப்படாமல் போய்விடும் என்ற பழமொழி உள்ளது. ஆமை என்றாலே துரதிர்ஷ்டவசமானது என்று சொல்வார்கள். ஆனால் ஆமை சிலைகளை வீட்டில் வைத்தால் அதிர்ஷ்டத்தை தரக்கூடியது என்று வாஸ்து சாஸ்திரம் சொல்கிறது. நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளவர்களுக்கு பண வருமானத்தை அதிகரிக்குமாம் ஆமை சிலைகள்.

மகாவிஷ்ணுவின் அவதாரம்: ஆமை என்பது மகாவிஷ்ணுவின் அவதாரமாக போற்றப்படுகிறது. அமுதம் வேண்டி தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது பகவான் மகாவிஷ்ணு கூர்ம அவதாரம் எடுத்து மலையை தனது முதுகில் தாங்கி நின்றார் என்கிறது விஷ்ணு புராணம். எனவே ஆமை என்பது இறைவனின் அம்சம் அதிர்ஷ்டம் தரக்கூடியது. அதே நேரத்தில் உயிருள்ள ஆமையை வீட்டில் வளர்க்கக்கூடாது என்றும் வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.

 Auspicious direction of Tortoise idols as per Vastu sastra

உயிருள்ள ஆமை: நம்முடைய வீட்டில் சிலர் ஹாலில் தோட்டத்தில் நீருற்றுகள் வைத்திருப்பார்கள். நீர் தொட்டிகள் அழகுக்காக வைத்திருப்பார்கள். அந்த நீருற்று தொட்டிகளில் உயிருள்ள ஆமையை வளர்க்க ஆசைப்படுவார்கள். மீன்களை வளர்ப்பது போல உயிருள்ள ஆமைகளை வீட்டிற்குள்ளோ தோட்டத்து நீர் தொட்டிகளிலோ வளர்க்கக் கூடாது. அது எதிர்மறை ஆற்றலை உருவாக்கி விடும் என்கிறது வாஸ்து சாஸ்திரம். அதே நேரத்தில் ஆமை சிலைகளை நாம் வீட்டில் வைக்கலாம். நீங்கள் செல்லும் பாதையில் ஒரு ஆமை உங்களை கடந்து செல்வதைக் கண்டால் அதை கைகளில் எடுத்துச்செல்ல வேண்டாம். அது நல்ல விசயமல்ல. அந்த ஆமையை கவனமாக எடுத்துச்சென்று அது செல்லும் திசையிலேயே பாதுகாப்பாக விடுவது நல்லது.

செல்வ வளம் தரும் ஆமை சிலை: வாஸ்து சாஸ்திரத்தின் படி, உயிருள்ள ஆமையை வீட்டில் வைத்திருப்பது எதிர்மறை அதிர்வுகளை உருவாக்குகிறது, எனவே உயிருள்ள ஆமையை வீட்டில் வைக்க வேண்டாம் என்று வாஸ்து சாஸ்திரம் சொல்கிறது. உங்கள் அலுவலகத்திலோ அல்லது வீட்டிலோ ஆமை சிலையை வைக்க விரும்பினார் ஜோதிடரின் வழிகாட்டுதலின்படி மரம், படிகம் அல்லது உலோகத்தால் செய்யப்பட்ட ஆமை சிலையை வைத்துக் கொள்ளலாம். வாஸ்து தோஷங்கள் உள்ள வீடுகளில் பிரச்சினைகள் அதிகமாக இருக்கும். பண நெருக்கடிகள் இருக்கும். கடன் பிரச்சினை அதிகமாக இருக்கும். நாம் வீட்டில் ஆமை சிலைகளை வைப்பதனால் வாஸ்து தோஷங்கள் நீங்கும். ஆமை சிலைகள் மங்களகரமானவை.

ஆமை வாங்க சிறந்த நாள்: நாம் நம்முடைய வீட்டிற்கு ஆமை சிலைகளை வாங்க விரும்பினால் புதன், வியாழன், வெள்ளி போன்ற வார நாட்களில் வாங்கலாம். சுக்கிர ஹோரை, குரு ஹோரையில் ஆமை சிலைகளை வாங்கலாம். வீட்டில் ஆமை சிலைகளை வைப்பதனால் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தின் மூலம் செல்வ செழிப்பு ஏற்படும். பணத்தை ஈர்க்கும் சக்தி ஆமை சிலைக்கு உள்ளது.

எந்த திசையில் வைக்கலாம்: உலோகத்தினால் ஆன ஆமை சிலைகளை நாம் வீட்டில் வடக்கு அல்லது வடமேற்கு திசையில் வைப்பதன் மூலம் குழந்தைகளின் வாழ்க்கையில் வளர்ச்சி உண்டாகும். கல்வி, சுப காரியங்கள், வேலை போன்றவைகளின் மூலம் குழந்தைகளின் வாழ்க்கையில் நற்காரியங்கள் நடைபெறும். நேர்மறை ஆற்றலை அதிகரிக்கச் செய்யும்.

அதிர்ஷ்டம் அதிகரிக்கும்: அதே போல மரத்தினால் ஆன ஆமை சிலைகளை நாம் வீட்டில் வைப்பதன் மூலம் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். சண்டை சச்சரவு உள்ள வீட்டில் நாம் மரத்தால் செய்யப்பட்ட ஆமை சிலைகளை வைப்பதன் மூலம் அதிர்ஷ்டம் அதிகரிக்கும் பொருளாதார நிலை மேம்படும். மரத்தால் ஆன ஆமை சிலைகளை நாம் வீட்டின் கிழக்கு அல்லது தென்கிழக்கு திசையில் வைக்கலாம். அது காரிய வெற்றியை உண்டாகும்.

தென்கிழக்கு திசை: அதே போல நாம் கிரிஸ்டல் எனப்படும் ஸ்படிகத்தால் ஆன ஆமை சிலைகளை வைக்கலாம். இதன் மூலம் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். ஸ்படிக ஆமையை நாம் தென்மேற்கு திசையில் வைக்கலாம். இதன் மூலம் செல்வ வளம் அதிகரிக்கும். வடகிழக்கு பகுதியில் ஸ்படிக ஆமையை வைப்பதனால் புகழும் செல்வாக்கும் அதிகரிக்கும்.

ஆவணி மூலம் திருவிழா.. பாண்டிய மன்னனாக முடிசூடும் சுந்தரேஸ்வரர்.. மதுரையில் கோலாகலம் ஆவணி மூலம் திருவிழா.. பாண்டிய மன்னனாக முடிசூடும் சுந்தரேஸ்வரர்.. மதுரையில் கோலாகலம்

நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும்: நம்முடைய வீட்டில் ஆமை சிலைகளை வைப்பதன் மூலம் பொருளாதார ரீதியான பிரச்சினைகள் முடிவுக்கு வரும். படுக்கை அறையில் ஆமை சிலையை வைத்திருந்தால் தூக்கக்குறைபாடுகள் நீங்கும். ஆமை சிலையை கண்ணாடி கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி போட்டு வைப்பதனால் நல்ல அதிர்வுகள் ஏற்படும். செல்வம் பல மடங்காக அதிகரிக்கும். தொழில், வியாபாரம் செய்யும் இடங்களில் ஆமை சிலைகளை வைப்பதன் மூலம் வெற்றிகள் அதிகரிக்கும். லாபம் பன்மடங்காக பெருகும். கண் திருஷ்டி பிரச்சினை நீங்கும். எதிர்மறை சக்திகளை நீக்கும் சக்தி ஆமை சிலைகளுக்கு உள்ளது.

English summary

Vastu Shastra says that keeping turtle idols in the house brings good luck. Turtle idols can increase cash income for those who are in financial crisis.According to Vastu Shastra, keeping a live tortoise in the house creates negative vibrations and hence it is advised not to keep a live tortoise in the house

Read Entire Article